பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ஏராளம். அவற்றை இயக்குவதில் சிறிதும் காமதம் கிடையாது. காற்றிலும் விரைவாக இயக்கினர்கள்.

இடைவேளையின்போது, அநேகமாக எல்லோரும் வெளித் தாழ்வாரங்களுக்கு வந்து விட்டோம். தாழ்வாரங் களில், காப்பி, தேனிர் விற்றன. குளிர்பானங்கள் கிடைத்தன. ஐஸ்கிரிம் விற்பனையே அதிகம். சிகரெட் விற்பனையும் உண்டு. தாழ்வாரங்களில் புகை பிடிக்கலாம். ஆனல் உள்ளே புகை பிடிக்கக் கூடாது. இது சட்டம் மட்டுமல்ல; நடை முறையும்.

சோவியத் நாட்டில் நவம்பர் மாதத்தில் மட்டுமல்லாது. அதிலும் கடுமையான குளிர் காலத்திலும், பெரியவர் களும் தாராளமாக ஐஸ்கிரீம் சாப்பிடுகிருர்கள். இதிலே தனி விருப்பம் அவர்களுக்கு. ஐஸ்கிரீம் வெறும் தின்பண்ட மல்ல, சத்துள்ள உணவு. எங்கே? இங்கேயல்ல; அங்கே.

இடைவேளையில் நாங்க ளு ம் தாழ்வாரத்திற்கு வந்தோம்.

என்ன வேண்டுமென்று கேட்டார் வ்லாடிமீர்.

ஒன்றும் வேண்டாமென்ருேம். 'காப்பி அல்லது தேனிர் குடிக்கலாமே என்ருர், வெட்கப்பட்டுக்கொண்டு மறுத்துவிட்டோம்.

விரைந்து சென்ருர், நான்கு "ஐஸ்கிரீம்களோடு திரும்பி வந்தார், வ்லாடிமீர். ஆளுக்கொன்று கொடுத் தார். மறுக்க முடியவில்லை. வாங்கிக் கொண்டேன்: வாயில் வைத்தேன். பல்லைக் கசிற்று. சில விடிைகள் பொறுத்தேன். மீண்டும் உண்ணப் பார்த்தேன், 碘 போட்டு குத்துவதுபோல் இருந்தது. உண்மைல் போட்டுவிட்டால் வ்லாடிமீர் மனம் கோகுமோ என்ற அச்சம் உலுக்கிற்று. தவியாகத் தவித்து. கடலையளவே ஒவ்வொரு முறையும் உண்டு, தீர்த்துவிட்டேன். நான்