பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

ஒன்ருேடொன்று போட்டியிட்டு, தலைதெறிக்க ஒட்ட பந்தயம் நடத்துவதல்லவா, மனித வாழ்க்கை இடும்ை இயல்பென்பான் துன்பம் உறுதல் இவன்' என்னும் குறளை ஏன் மறந்து விட்டாய் என்று இடித்தது. உள் மனம். ஆறுதல் பெறும் முயற்சியில் லால்பகதூர் சாஸ் திரியின் அருமை பெருமைகளைச் சிந்திக்க முயன்றேன்.

சாஸ்திரி, உருவத்தால் சிறியவர். வாழ்க்கையால் பெரியவர். எத்தனை உயர்ந்த அதிபர்களுக்கும் அஞ்சாத பிரதமர் : இனிமையான சொல்லினர் ; ஆலுைம் உறுதி யான செயல்படைத்திருந்த பிரதமர். கூச்சம் நிறைந்த அடக்கமான, ஆனல் யாருக்கும் அஞ்சாத, பிரதமர், கம் லால்பகதுர் சாஸ்திரி. அவர் யார்? சீமான் வீட்டுச் செல்லமா ? இல்லை. ஏழை விட்டு மகன். மேட்ைடுப் படிப்பாளியா? இல்லை. இந் நாட்டில் சாத்திரம் கற்றவர். நாட்டுப் படிப்புப் படித்து நாடாளும் நிலக்கு. உயர்ந்தவர்.

இந்தியாவின் விடுதலை இயக்கத்தில் அவர் பங்கு பெரிது. அண்ணல் காந்தி அடிகளின் தலைமையில் அவரது வழியைப் பின்பற்றி சாஸ்திரி ஒன்பது முறை சிறை சென்றதை எண்ணிய போது, நன்றிப் பெருக்கால், என் கண்கள் கலங்கின. சில இலட்சம் தியாகிகள், தங்கள் தங்கள், சொந்த நலன்களே மறந்து' ந ட் டி ன் விடுதலைக்காக, பல தியாகங்களேயும், மனமுவந்து, செய்ததால் அல்லவா என்னேப் போன்ற கோடானு கோடி இந்தியர்களும் சுதந்திரக் குடியரசின் பெருமை மிக்க குடிமக்களாக வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிருேம் என்பதை நினைத்த போது, காந்தி, முதல் குமரன் வரை என் வணக்கத்திற்கு உரியவர்களா. ஞர்கள். -