பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


விடுப்படப் பல்லைக் கடித்தல் முறைத்துப் பார்த்தல் முதலிய அறிகுறிகளை வெளிப்படுத்துவார். உளப் போராட்டத்தாலும் நடுக்கத்தாலும் உண்டாவது.

85. இதன் அறிகுறிகளாவன?

இழுப்பு, மயக்கம், தசை நடுக்கம். விலகுநிலை இதன் தனித்தன்மை.

86. எழுத்தாளர் கைவலி என்றால் என்ன?

கையிலும் முன்கையிலும் ஏற்படும் சுருக்கத்தினால் ஏற்படுவது. எழுதும் பொழுது தவறான உட்காரும் நிலைமையே இதற்குக் காரணம்.

87. இடுப்பு வலி அல்லது மூச்சுப் பிடிப்பு என்றால் என்ன?

இடுப்புத் தசைகளின் வலி நிலை. அவற்றின் நார் உறைகள் வீங்குவதே இதற்குக் காரணம். முள் எலும்புத் தட்டு இடம் பெயர்வதாலும் ஏற்படலாம்.

88. சுளுக்கு என்றால் என்ன?

ஓர் இணைப்பைச் சூழந்துள்ள மென் திசுக்களுக்கு ஏற்படும் காயம். இதனால் நிறமாற்றம், வலி, வீக்கம் முதலியவை ஏற்படும். வலி நீக்கும் மருந்தைத் தடவிப் போக்கலாம்.

4. கட்டி

89. கட்டி என்றால் என்ன?

இயல்புக்கு மீறிய வீக்கம்.

90. இதன் வகைகள் யாவை?

1. எளிய கட்டி - தீங்கு தராதது. மருந்து மூலம் போக்கலாம்.
2. தீங்கு தரும் கட்டி - புற்று நோய்.

91. வில்ம் கட்டி என்றால் என்ன?

சிறுநீரகத்திலுள்ள பிறவி நிலைக் கட்டி தீங்கு தருவது.

92. தசைக்கட்டி என்றால் என்ன?

தசைத் திசுவாலான பெருக்கம்.

93. சீழ்க்கட்டி என்றால் என்ன?