பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

500

primary amputation : (நோயி) முதனிலை உறுப்பு நீக்கம்: அழற்சி அல்லது வீக்கம் இடையூறாக நிகழ்வதற்கு முன் செய்யப்படும் உறுப்புத் துண்டிப்பு

primary paltery : (மின்.) அடிப்படை மின்கலத் தொகுதி : மின் விசை உண்டாக்கும் அடிப்படை மின்கல அடுக்கு

Primary cell : (மின்.) அடிப்படை மின்கலம் : வேதியியல் ஆற்றலை மின்னியல் ஆற்றலாக மாற்றக் கூடிய மின்கல அடுக்கு. இதில் ஒரு ஜாடியில் மின்பகுப்புக் கரைசலும் இரு மின் வாய்த் தகடுகளும் இருக்கும்

primary coil : (மின்.) அடிப்படைச் சுருள் : இந்தச் சுருளில் மூல ஆற்றல் செலுத்தப்பட்டு, விசையின் காந்தக்கோடுகள் உண்டாக் கப்படுகின்றன. அவை இன்னொரு சுருளுடன் இணைக்கப்படும்போது அதில் ஆற்றல் தூண்டப்படுகிறது

primary colours : அடிப்படை வண்ணங்கள் : கலவை மூலக் கூறாய் உதவும் சிவப்பு, பச்சை, ஊதா, மஞ்சள் ஆகிய தலையாய வண்ணங்கள்

primery planets : அடிப்படைக் கோள்கள் : கதிரவனை மையமாகக் கொண்டு சுழலும் நேர் கோள்கள்

primary-type glider ; (வானூ.) அடிப்படை வகைச்சறுக்கு விமானம்: சறுக்கு விமானிகள் அடிப்படைப் பயிற்சி பெறுவதற்காகத் திருத்தமின்றிச் செய்யப்பட்ட சறுக்கு விமானம்

primary winding : (மின்.) அடிப்படைச் சுருணை: மாற்று மின்னோட்ட ஆதாரத்திலிருந்து மின் விசை பெறுகிற ஒரு மின்மாற்றியின் சுருணை

primavera : (மர.வே.) சீமை நூக்கு : மத்திய அமெரிக்க மர வகை. மஞ்சள் நிறமுடையது; நாளடைவில் கருமை நிறம் பெறும் அலங்கார மேலடை மெல்லொட்டுப் பலகைகளுக்கும், சன்னல் கதவுகளுக்கும் அறைகலன்களுக்கும் பயன்படுகிறது

prime : (கணி.) (1) பகா எண் : கணிதத்தில் பகா நிவையான எண்

(2) தனி அணு : வேதியியலில் இயை நிலையில் அலகான தனி அனு

prime number : (கணி.) பகா எண்: பொதுக் காரணிகள் கொண்டிராமல் ஒருமை அளவுடைய எண்

priming paint : ( விண்.) முற்சாயம் : முற்சாயமாகச் சாயக்காரர்கள் பயன்படுத்தும் கலவை. இது மேற் பரப்பிலுள்ள துவாரங்களை அடைப்பதற்கு முதல் சாயமாகப் பூசப்படுகிறது

prime vertical | prime vertical circle : (விண்.) வான் வட்டம் : தொடுவானத்தின் கிழக்கு-மேற்கு மையங்களைக் கடந்து உச்சத்தில் நடுநிரல் வான் கோட்டினை செங்குத்தாக வெட்டிச் செல்லும் வான் வட்டம்

priming ; வேலை நீர் ஏற்ற இறக்க மாறுவிதை : வியன்கால் வேலை ஏற்ற இறக்கத்திலிருந்து சமன் கால் வேலை ஏற்ற இறக்கத்துக்கு இடையே நிகழும் வேலை ஏற்ற இறக்க விசைவிரைவியக்கம்

preventive leads: (மின்.) தடுப்பு முனைகள் : மாற்று மின்னோட்ட மின்னோடித் தொகுதியில் திசை மாற்றுச் சுடர் பொறியைக் குறைப்பதற்குப் பயன்படும் தடுப்பு முனைகள்

principle of moments: (பொறி.) நெம்புதிறன் விதி : "ஒரு புள்ளி