பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


எளிதில் அடையலாம் என்பதை அவரது பாடலால் அறிவுறுத்துகிறார் இவ்வான்றவர்.

ஊக்கத்தை ஏர் என்றார் ; உடலை வயல் என்றார் ; விரதத்தைச் செந்நெல் விதை யென்றார் : ஒழுக்கத்தை நீர் என்றார் , ஐம்பொறிகளை வேலி என்றார். இப்படி உருவகப்படுத்தி உரைத்த அழகை அவரது பாட்டில் சுவைப்பீர்களாக. ஆகவே, புலவர் கருத்து ஆக்கமாகிய பேரின்பு வீட்டினை விரும்பின், ஊக்கம் வேண்டும் ; விரதங்களை மேற் கொள்ளவேண்டும் : ஒழுக்கத்தை யுடையவராய் இருத்தல் வேண்டும் , ஐம்புலன்களை அவற்றின் போக்கில் போகவிடாமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பனவற்றை எவ்வளவு இனிமையாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார் என்பதை ஒர்ந்து உணர்வீர்களாக !