பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியங்களை ஒத்திட்டுக் கற்பின் புலனுகாமற் போகாது.

"பத்தியின் பாலர் ஆகிப்
பரமனுக் காளாம் அன்பர்
தத் தமிற் கூடி னார்கள்
தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி யின்பால்
முதிர்தலே வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல
விளைந்தன சாலி எல்லாம்"

என்னும் சேக்கிழார் பெருமானரது செவ்விய வாக்கு.

"சொல்லருஞ் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருங் தீன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே"

என்னும் தேவர் செய்யுளின் கருத்தை ஒட்டியது என்பதைச் சுட்டவும் வேண்டுமோ! இவ்வாறே கம்பர் என்னும் கவி குஞ்சரத்தின் பாடலாகிய,

என்பது, திருத்தக்க தேவர் பெருமானரது திருந்திய மொழியாகிய,

என்பதன் சாயை அன்றோ?