இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114
உயிரி படைக்கருவி ஆகும்.
32. உயிர் ஒழுக்க உடன்பாடு என்றால் என்ன?
- இதை 20 ஐரோப்பிய நாடுகள் செய்துள்ளன. மரபாக்கத்தை மனிதன் மீது பயன்படுத்துவதைத் தடுப்பது இதன் முதன்மையான நோக்கம். (1997)
14. கால்நடை மருத்துவம்
1. கால்நடை அறிவியலின் புதுப் பெயர் என்ன?
- விலங்கு அறிவியல்
2. முதன் முதலில் வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது எது?
- 10,000 ஆண்டுகளுக்கு முன் நாய்தான் வீட்டுவிலங்காக வளர்க்கப்பட்டது.
3. அடுத்து வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டவை எவை?
- கி.மு. 7,000 இல் ஆடுகள் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. இவற்றிற்குப் பின் குதிரைகள், மான்கள், ஒட்டகங்கள் முதலியவை வீட்டு விலங்குகளாக ஆயின.
4. குதிரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நாடு எது?
- சீனா
5. சீனாவிற்கு அடுத்துக் கால்நடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் எவை?
- இந்தியா, அமெரிக்கா, பிரேசில், உருசியா, டென்மார்க் முதலியவை.
6. மரபுவழிப் பாடத்திட்டத்தில் விலங்கு அறிவியலின் நிலை என்ன?
- கால்நடை உற்பத்தியின் தொழில்நுட்பத்தை ஆராய்தல். கால்நடை என்பது ஆடு, மாடு, குதிரை, பன்றி முதலியவை ஆகும்.
7. புரதத்தின் வகைகள் யாவை?
- 1. தாவரப்புரதம்
- 2. விலங்குப் புரதம்.
8. தாவரப்புரதம் உலக அளவில் எந்த அளவு கிடைக்கிறது?