38 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவன் - மெய்ப்பொருள்! மெய்யன்பர்கள் மெய்ம்மை மேவினார். தகுதியுடையார்க்கு வழங்குவதில் என்ன சிறப்பு இருக்கிறது. தகுதி இல்லாதாரைத் தகுதியுடையாராக்கி ஆட்கொள்ளுதலே சான்றோருக்கு அழகு தகுதி மிகுதியும் உடையோருக்குக் கடன்! இறைவன் வெண்ணிறு சண்ணித்த மேனியன். இறைவன் ஏன் வெண்ணிறணிகின்றான்? ஆன்மாக்கள் தாம் செய்த வினை கெட நீறணிகின்றான். இது இயல்பு; மரபு. இயல்பிலேயே வினையின் நீங்கி விளங்கிய அறிவினன் இறைவன் அப்படியானால் இறைவன் உடம்பில் திருநீறு எதற்கு? இந்த வினாவுக்கு விடை திருக்கோவையார் தருகிறது. குழந்தைக்கு நோய்! குழந்தை மருந்துண்ண இயலாது. ஏன்? குழந்தையின் பசுங்குடல் மருந்தைத் தாங்காது. அதுபோல, ஆன்மாக்களின் வினைவளம் நீறெழ நீறணிவான் அம்பலவன் என்று கூறுகிறது திருக்கோவையார். இறைவா! நின்னைத் தொழுதெழுவார் வினைவளம் நீறாய்ப் போக நீறணிந்து நிலவும் நின் கருணையால் என் பொய் கெடட்டும் என்பது கருத்து. ஆட்கொண்டருளும் கடப்பாடுடைய இறைவன் பாய்ம்மையை அல்லவா மெய்ம்மையாக்க வேண்டும்? அதுதானே பிறவா யாக்கைப் பெரியோனுக்குப் பொருத்த மானது என்பது மாணிக்கவாசகர் எண்ணம்.
"இறைவா! அம்மையப்பனே! அருளே உருவமாகிய சிவசக்தியைப் பாகத்தில் கொண்டருளியவனே! நீயே வந்து என்னைத் திருப்பெருந்துறையில் வாவென்றருளினை! பணி கொண்டருளினை! திருப்பெருத்துறை சிவனே, நின்னை அடைவதற்கு முன் உன்னை மூவர்கோனாய், மூவர் தலைவனாய்க் கண்டனன். அருமையில் எளிய அழகெனக் கண்டனன். ஆனால் நீயே வந்தெனைத் தலையளித்து ஆட்கொண்டருளிய பின் நின்னருமை உணர்கிலேன்! மழலையின் கையில் பொற் கிண்ணம் போலாயிற்று! நின்னருள் என்வசம்! திருப்