பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கவியின் கனவு பாட்டு: மொழிகள்! இம்மொழிகளுக்கு எதைத்தான் உவமை கூறுவது? உலகின் செல்வத்தையெல்லாம் பணயமிட்டாலும் இப்பேரின்பத்தைப் பெற முடியுமா? மனிதனை அமரனாக்கும் மழலை இன்பமே நீ வாழ்க. * சாமா இராகம் கவி வீரன். : கவி வீரன்.2 : குழலிசை இதற்கிணையாமோ - வேய்ங் குழலிசை இதற்கிணையாமோ யாழொலியும் ஈடாமோ.... (குழலிசை) மழலையின் தேன்மொழி அழகொளியாலே தழைக்குது ஆனந்தம் தாரணி மகிழ்வுறும் (கு) அன்பெனும் சுவைமது அனுதினம் பொழிந்திடும் பண்பினிக்கும் குரலால் பாட்டமுதம் தரும் துன்பத்தைத் தீர்த்திடும் தெய்வமாம் குழந்தைகள் இன்பமாய் வாழ்ந்திட இறைவனின் கருணையால் (குழலிசை) (திடீரென முரட்டு வீரர்கள் அறுவர் இடி நகையுடன் வருதல் - Aகரமான காவடி ஒசைகள்) யார் நீங்கள்? வேந்தர் வீரசிம்மரது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள். இதுதானே சாந்தி குருகுலம் என்பது? - ஆமாம், இதுதான் சாந்தி குருகுலம் உமது பெயர்தானே மகாகவி ஆனந்தர் என்பது? - - -