பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கவியின் கனவு மணி மேன மணி மேன மணி மேன மணி மேன மணி மேன மணி அரசகுமாரியின் செயலில் ஒரு போதும் குற்றம் நேரக் கூடாது. வருங்கால ராணின்னு சொல்லுங்ன்னா! வந்த செய்தி. நான் தினமும் ஒரு புதுமையை நாடி இங்கு வந்து கொண்டே இருக்கிறேன். ஆனால், அது விலகிப் போய்க்கொண்டிருக்கிறது. (நெருங்கிப் பேசுகிறாள்) என் தங்கை சாந்திக்கு உடல்நிலை சரியில்லை. நான் போக வேண்டும். உடம்பு சரியாயில்லையா என் மதனியாருக்குச் சுகவீனமா ஐயையோ! ஏன்? என்ன, எப்படி, எப்போது, எதனால்? அரண்மனை வைத்தியர் ஆயிரம் பேர் இருக்க என் அண்ணிக்கு ஆபத்து வரலாமா? நான் போய் அழைத்து வரவா? வேண்டாம். இந்தப் பாழும் அரண்மனை வாசம் எங்கள் அமைதியையே கெடுத்துவிட்டது. என்ன? கனக மாளிகை போன்ற இந்தக் கட்டிடமா பிடிக்கவில்லை? சிறையின் சுவர்கள் இரத்தினக் கற்களால் இழைக்கப்பட்டிருக்கிறதென்று கைதிகள் இரத்தின விழாக் கொண்டாட முடியுமா? நீங்கள் இங்கு கைதியைப் போலவா இருக்கி lர்கள்? விரும்பும் போது விடுதலை பெறலாம். இல்லை. அரசர் எம்மை விடுவிப்பதாக தெரிய வில்லை. ஆமாம். உங்களைத் தனியாகவிட அவருக்கு விருப்பமில்லை. அழகான ஒரு துணைவியுடன் தான் அனுப்ப எண்ணம். (தன்னையே சட்டிக் காட்டி/