பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மணி வீரசி மணி வீரசி மணி வீரசி மணி வீரசி மணி ஊர்வ மணி ஊர்வ கவியின் கனவு கஞ்சியடுப்புக்குக் கரியாக்கிக் கொண்டிருந்த ஒரு ஏழை உழவர் தந்தது. தாங்கள் கலாசாலையில் பயின்றதுண்டா? பார்த்ததுகூட இல்லை, மன்னவா? ஏன், பார்க்க அவகாசமில்லையா? ஏழைகளின் கண்ணுக்கு எட்டாத கட்டிட மல்லவா, கலாசாலை? கலைஞானியாயிருந்தும் கல்லூரியை விரும்பாதது ஏன்? பணமற்ற எளியவரை அது ஏற்றுக் கொள்வ தில்லையே. உம். நாட்டின் ராணி, கலைவாணி உம்மைச் சில கேள்விகள் கேட்கப் பிரியப்படுகிறாள். விடை கூற முடிந்ததற்குப் பதில் கூறத் தயங்க மாட்டேன். தாம் கலாசாலையில் பயிலவில்லை என்று கூறுவது உண்மைதானா? எதற்கும் எங்கும் நான் பொய் கூறப் போவ தில்லை. தாயே, வாய்மையே எமதுயிர் - உண்மையே எமதுடல், உங்கள் திறமையைப் பார்த்தால் கல்லூரியில் பட்டம் பெற்ற புலவர் போலக் காணுகின்றதே மானிடர்க்கு இயற்கையறிவு பிறப்பிலேயே உண்டு. மறுக்கவில்லை. என்றாலும், அதை ஒளி பெறச் செய்வது கல்விச்சாலைதானே? - J இந்த உலகமே ஒரு எல்லையற்ற கலாசாலை, இதில் நாம் சந்திக்கும் அனுபவங்களே நாம் கற்கும் பாட நூல்கள். -