பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுத்தரம் 107 மணி சுகதே : கனி சுகதே : மணி சுகதே சுகதே மணி சுகதே அப்புண்ணியாத்மாவை நேரில் பார்த்ததில்லை. ஏன், தேடிப் பார்க்கவில்லையா? இல்லாத மனிதரை எங்கே சென்று தேடுவது? ஆசிரியர் இவர்தான் என்று எப்படித் தெரிந்து கொண்டிர்கள்? அந்த நாடக ஏட்டின் முடிவில் 'கவி அமரன்' "அகண்ட உலகம் என்று எழுதப்பட்டிருந்தது. அதுவும் புனைபெயர்தான் போலிருக்கிறது. ஆமாம். அப்படித்தான் தோன்றுகிறது. அந்த ஆசிரியர் எங்கிருப்பினுமென்ன! அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழியா வரம் பெற்ற அறிவின் சுடர்கள்: ஆமாம், இந்தச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள் இவர்களுக் கெல்லாம் எப்போதுமே ஆயுள் குறைவுதானோ! ஆமாம்! அமைதியற்ற இந்த அநித்திய உலகிலே ஆயுளை நீட்டிக்கொள்ள அவர்கள் விரும்புவ தில்லை! மேலும், ஒயாது சிந்தித்து உள்ளத்தை எரிமலையாக்கிக் கொண்டு அதற்கு அவர்களே இரையாகி விடுகிறார்கள். அறிஞர்கள் விளக்கைப் போன்றவர்கள். உலகுக்கு வெளிச்சம் காட்ட அவர்கள் உள்ளத்தையும், உடலையும் எரித்துக் கொண்டு மடிகிறார்கள். - உங்கள் சொந்த ஊர்?

நாங்கள் அனாதைகள். தாய் தந்தை எல்லோரும்

நாங்கள் குழந்தையாய் இருக்கும்பொழுதே காலமாகி விட்டார்கள், நானும் என் தங்கையும் ஒரு ஏழை நாடோடிப் பாடகரால் வளர்க்கப் பட்டோம். அவரிடம் எங்கள் தாய் தந்தையர் யாரென்று கேட்டோம். காலம் வரும்போது சொல்லுகிறேன் என்றார். ஆனால், சொல்லா