பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 93

ஆயிரமும் வீசிநின்று திசை சேர நடமாடிச் சிவலோகனார் உண்டார் நஞ்சு உலகுக்கோர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்றன் கடும் பிணியும் நடுதொழிலும் கைவிட்டவே” என்று உரைக்கின்றார்.

ஒரு கால் அவர் ஆலவாய்ப் பெருமானைக் கனவில் கண்டார்; அக்காட்சி கனவுபோல இன்புறுத் தினமையின், அதனை

g

பட்டமும் தோடும் ஒர் பாகம் கண்டேன் பார்திகழப் பலிதிரிந்து போதக்கண்டேன் கொட்டிநின்று இலயங்கள் ஆடக்கண்டேன் குழைகாதில் பிறை சென்னி இலங்கக் கண்டேன் கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக்கண்டேன் கனமழுவாள் வலம் கையில் இலங்கக் கண்டேன் சிட்டனைத் திருஆலை வாயில் கண்டேன் தேவனைக் கனவில் நான் கண்டவாறே”

என்று பாடிக் காட்டுகின்றார். இவ்வாறே, திரு நல்லூரில் கண்ட கனவை, - -

‘செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள்

திகழ்முத்தனைய

நஞ்சணிகண்டன் நல்லூர் உறை

நம்பனை நான் ஒருகால்

துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன்தான் -