பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348. ஒளவை சு. துரைசாமி

களால் ஒருவாறு தெளிவுற்றானாயினும், ஞானாசிரி யரை மறுபடியும் வணங்கி, “ஈழப்படையாகிறது சாலவும் பாபகர்மாக்கள் நிறைந்தது; அவர்கள் சோழமண்டலத் தெல்லையிலே புகுதில் ரீமகா தேவர் கோயில் உள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணருக்கும் ராஷ்டரத்துக்கும் அடங்க விரோத முண்டாகும்; இதற்குப் பரிகாரமாக ஜபஹோமார்ச் சனங்களால் எல்லாப்படியாலும் அவர்கள் அபிஷ்டம் அதம் பண்ணியருளவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். -

ஞான சிவதேவர் சம்புவராயனுடைய உள் வேட்கை தெரிய விளங்கியதும், தானும் மனம் தெரிந்து, “ஈழப்படையாகிறது, சாலாபாஷ்டருமாய்த் துர்ச்சனருமாய்த் திருவிரா மேஷ்வரத்தில் தேர் கோயிலைத் திருக்காப்புக் கொண்டு பூஜைமுட்டப் பண்ணி அங்குள்ள ஸ்ரீபண்டாரமெல்லாம் கைக்கள் பூசலிலே அறப்பட்டுத் துறப்புண்டு போம்படிக்கு அதிருஷ்ட முகத்தாலே வேண்டும் யத்னம் பண்ணு கிறோம்” என்று சொல்லி இரண்டு நாட்குப்பின் சாம்புவராயன் முன்பிலே “அகோர சுபூஜை’ யைத் தொடங்கின்ார். சம்புவராயனும் அந்தப் “பூஜை'யைத் தொடங்கி வைத்துவிட்டுப் படைவீடு சென்று சேர்ந்து போர்க்களத்தில் செயற்குரிய அரசியற் செயல்முறைகளைச் செய்து கொண்டிருந் தான். ஆற்பாக்கத்தில் ஞானசிவதேவரது “அகோரசு பூஜை” இருபத்தெட்டு நாட்கள் நடந்தது.