பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36. திருக்குறள் விளக்கு

முன் குரல் : நீ போ; நான் வரமாட்டேன். அவளை இதோ கைதட்டி அழைத்து, வா என்று சொல் கிறேன்; அவள் வருகிறாளா இல்லையா, பார்.

(கை தட்டும் ஓசை.)

பெண் குரல்-மருதி : ஆ! இது என்ன அநீதி யாரோ ஒருவன் என்னை வா என்று அழைக்கிறானே உல கத்தில் கற்புடைய பெண்டிர் பிறர் நெஞ்சிற் புக மாட்டார் என்றல்லவோ பெரியவர்கள் சொல் வார்கள்? இந்தத் தீயவன் என்னைக் கண்டு அழைக்கிறானே ! என் கற்புப் போயிற்று! என் வாழ்க்கை தொலைந்தது! -

தோழி: என்னடி இது? இப்படி நிலை கலங்கி நிற்கிறாய்? வேகமாய் நட.

மருதி: அந்தப் பாவி என்னைக் கைதட்டி அழைத்ததை நீ காணவில்லையா? நான் அவன் நெஞ்சில் புகுந்து தூய்மை கெட்டுவிட்டேன். நான் செய்த குற்றம் ஒன்றும் இல்லாமல் இருக்கவும், இந்த அவல நிலை எனக்கு வந்துவிட்டதே! ஐயோ! நான் இனி என்ன செய்வேன்!


தோழி : தெருவில் நின்று புலம்புவதால் பயன் இல்லை. வா, போகலாம்.

மருதி : ஆம், உண்மைதான். இங்கே நின்று புலம்பு வது ஒரு பயனையும் தராது. பூத சதுக்கத்திலுள்ள பூதத்தினிடம் போய் முறையிடுகிறேன். தவறு செய்தவர்களைத் தன் கைப்பாசத்தில் கட்டிப் புடைக் கும் பூதம் அல்லவா அது? என்னையும் தண்டிக் கட்டும். வா போகலாம்.

(நகர ஆரவாரம், வண்டிகளின் சத்தம்.)