பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஒற்றர்கள் மூலம் கஞ்சபுரி அரசன் பஞ்சமுகன் படை எடுத்து வரும் செய்தி யறிந்தான் பேய்நாகன்.

உடனே தன் அமைச்சர்களையும் தளபதிகளையும் அழைத்தான்.

கஞ்சபுரி அரசனை மூன்று நாட்களுக்குள் துரத்தி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் என் வாளால் கொன்று போடுவேன் என்றான்.

அமைச்சர்கள் அஞ்சினர். படைத் தலைவர்கள் பயந்தனர்.

கஞ்சபுரி அரசன் பஞ்சமுகனிடம் படைகள் அதிகம். அத்துடன் போர்த்தந்திரங்கள் அறிந்தவன். நிறைய ஆயுதங்கள் அவனிடம் உள்ளன. அவன் சுற்றிலும் உள்ள நாடுகளை ஒவ்வொன்றாக அடிமைப் படுத்தி வருகிறான்.

அவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட அரசர்களை, அவன் மன்னித்து விடுவான். நிறைய கப்பப் பணம் வாங்கிக் கொண்டு, போரிடாமல் திரும்பிப் போய்விடுவான். எதிர்த்துப் போரிட்ட நாட்டை அடிமைப் படுத்தி, அரசர்களையும் அமைச்சர்களையும் கழுவில் ஏற்றிக் கொல்வான். மக்களைக் கொள்ளையிட்டுப் பொருள்களை வாரி எடுத்துக் கொண்டு போய்விடுவான்.

அவனுடன் சமாதானமாகப் போவது நல்லது என்று ஓர் அமைச்சர் கூறினார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/34&oldid=1165213" இலிருந்து மீள்விக்கப்பட்டது