இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
பிய அந்த ஒளித்தகடுளின் ஊடே அந்தக் கப்பல் அடி வானத்தில் மறையும் வரை அவள் பார்த்துக் கொண்டே நின்றாள்.
முன்பின் தெரியாமல் தன்னை மணம்புரிந்து கொண்டு பிரிந்து சென்ற அந்தக் கணவனைப் பற்றி எந்தச் செய்தியும் அவள் அறியாமலே காலம் கழிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தன் குழந்தையுடன் கடற்கரையில் உள்ள மேடு அல்லது பாறையின் உச்சியில் ஏறி நிற்பாள். கடலின் அடி வானத்தை நோக்கி, அங்கு ஏதாவது கப்பல் தோன்றாதா, அதில் தன் கணவன் திரும்பிவர மாட்டானா என்று எதிர் பார்த்துக் கொண்டே இருப்பாள். காலையில் ஏறினால், மாலையில், பகலவன் மறைந்த பிறகுதான் அவள் அந்த இடத்தை விட்டு அகலுவாள்.
அவள் தன் குழந்தையைத் தாலாட்டியபடியே மனமுருகி வேண்டிக் கொள்கின்ற கீதம் காற்றில் அலைப்புண்டு கடலலைகளின் மேல் மிதந்து வரும்.
- ஆராரோ ஆரிரரோ
- ஆரரிரோ ஆராரோ!
- சீராரும் கண்மணியே என்
- செல்வத் திருமகனே!
- அன்புடனே நேசித்த
- அன்னையையும் பிள்ளையையும்
- துன்பமுற்றே ஏங்கவிட்டுத்
- தொலைதூரம் போனாரே!
- ஆராரோ ஆரிரரோ