உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

பச்சைக்கிளி பவழம்

கண்ணப்பன் தொலைவில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தார்.

அந்த ஊரின் பெயர் ஆலங்காடு. பெயர்தான் காடு என்று உள்ளது. உண்மையில் அந்த ஊர் ஒரு பெரிய நகரம்.

தான் சென்ற வேலை முடிந்து ஊர்த் தெரு வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, "அய்யா வாங்க! அய்யா வாங்க!" என்று யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினார். யாரையும் ஆட்களைக் காணவில்லை.

மறுபடி திரும்பி நடந்தார்.

"அய்யா வாங்க! அய்யா வாங்க!" என்று ஒரு மழலைக் கீச்சுக் குரல் கேட்டது.

கேட்ட திசையை உற்றுப் பார்த்தார். ஆம். அவரை அழைத்தது ஒரு பச்சைக் கிளி.

ஒரு கடையில் தொங்கிய கூட்டுக்குள் இருந்த பச்சைக் கிளிதான் அப்படி அழைத்தது.

கண்ணப்பர் அந்தக் கடைக்குச் சென்றார். அந்தக் கடையில், பச்சைக் கிளி, மைனா, சிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/25&oldid=1165204" இலிருந்து மீள்விக்கப்பட்டது