பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


தண்டி மூக்கன் செய்வதெல்லாம் , வேடிக்கையாக இருக்கும். அவனுடைய அம்மா, “பசுவுக்கு அகத்திக் கீரை போடு” என்று ஒரு நாள் அவனிடம் சொன்னாள்.

உடனே அவன் அகத்திக்கீரையைப் பறித்து வந்து, ஒரு சட்டியில் போட்டு, அடுப்பில் வைத்தான்.

“அடுப்பில் என்ன செய்கிறாய்?” என்று அம்மா கேட்டாள்.

“அம்மா, அகத்திக்கீரையை வேகவைத்துத்தானே நாம் தின்கிறோம். அதனால் பசுவுக்கும் கீரையைக் கடைந்து போட அடுப்பில் வைத்திருக்கிறேன்” என்று தண்டி மூக்கன் பதில் சொன்னான்.

அதைக் கேட்டு அவன் தாயார் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

ஒரு நாள் தண்டி மூக்கன் பெரிய நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துவிட்டு ‘ஹோ’வென்று அழத் தொடங்கிவிட்டான். தாயார் வந்து, ஏன் அழுகிறாய் என்று கேட்கவே, “அம்மா, இங்கே என் முன்னால் பார். என்னைப் போலவே ஒருவன் இருக்கிறான். அவன் வந்து உன்னை மிட்டாய் கேட்டால், நீ அவனை நான் தான் என்று நினைத்துக்கொண்டு கொடுத்துவிடுவாய். பிறகு எனக்கு இல்லாமல் போய்விடும்” என்று சொல்லி விட்டுத் தேம்பித் தேம்பி அழுதான், அவனுக்கு ஆறுதல் கூறுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

வீட்டிலே பரண்மேலே ஒரு பெரிய அரிசி மூட்டை வைத்திருந்தார்கள். அவன் அதைப் பார்த்துவிட்டு மற்றொரு நாள் அழத் தொடங்கினான். ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது, “நான் அந்தப் பக்கமாகப் போகும்போது அது என்மேல் விழுந்து கொன்றுவிடுமே” என்று கதறினான். அந்த மூட்டையைக் கீழே எடுத்து வைக்கும்வரை அவன் அழுகையை நிறுத்தவில்லை.

இப்படி, அவன் ஒன்றும் அறியாதவனாக இருக்கிறானே என்று எண்ணி எண்ணி அவன் தாய் வருந்தினாள். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/16&oldid=1090533" இலிருந்து மீள்விக்கப்பட்டது