உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மதுரைக் குமரனர் னிடார் என்று எண்ணிப் பேணினர். இதுவே இவ்வரசர் கட்கு இச் சான்ருேரை வணங்கி வழிபடுதற்கும் நன்கு மதித்தற்கும் முதற் காரணமாயிற்று. இவர்கள் உரைத்த வாயுறை வாழ்த்தும் செவியறிவுறாஉக்களும் பிறவும் இவ் வேந்தர்கட்கு நல்விளக்கமாய்த் துணை செய்தன. - - தமிழ்ப் புலமை நலத்தால் புகழ் மேம்பட்ட புல்வர் வேந்தர்களையும் வேறு செல்வர்களையும் நாடி வருவா ராயின், அவர் வரவறிந்து வரவேற்றுச் சிறப்பிப்பது 'தமிழ்ச் செல்வ வேந்தர் இயல்பு. புலவர்கள் வேந்தர் 'களின் நிர்ட்டிலுள்ள மலை, காடு முதலிய நாட்டு வள்ங்களே. யும் அவர்களின் போராண்மைத் திறங்களையும் பாட்டில் தொடுத்துப் பாடுவர். எத்தகையோர்க்கும் தம்முடைய நாடு புகழ் குணஞ் செயல் முதலிய கலங்களைச் சான்ருேர் பாராட்டிப் பாடினல் உள்ளத்தே மகிழ்ச்சியுண்டாதல் ஒருதலை. ஆகவே, அவர்கள் தம் முன் பாடிப் பாராட்டு ம்வ்ர்க்கு மிக்க பொருள் அளிப்பது இயற்கையாயிற்ற். ஏனைப் பாணரும் கூத்தரும் இப்புலவரோடு போந்து இசை பாலும் கூத்தாலும் செல்வ மக்களை மகிழ்வித்துப் பரிசில் பெற்றுச் செல்வர். * - . . ** * * இவ்வண்ணம் சான்ருேர்க்கும் பாணர் முதலியோர்க் கும் பொருள் கொடுத்துப் புகழ் கொண்டாரெனின், அப் புகழ் இவ்வேந்தர்க்கும் பிறர்க்கும் எப்பயனை விளைத்திருக் ம் என எண்ணலாம். அக்காலத்தே நாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளே வேறு நாடுகட்கு உய்த்துச் சென்றுரைக்கும் நாள் வெளியீடுகள் இல்லை. நாடெங்கும் பரவும் புகழ் மெல்ல மெல்லப் பரவிலைன்றி, ஒருவர்க்குப் பெரும்புகழ் பரவி கிலேபேறுகொள்ளுதற்கு வழி கிடையாது. எல்லா நாடுகட்கும் இனிது சென்று பெருவேந்தருடைய அருஞ் செயல்களை யெடுத்தோதிப் புகழ் பரப்பும் தொழில் இப் புலவர் முதலாயினர்க்கு உரியதாயிற்று. ஒரு வேந்த னுடைய ஆண்மையும் பட்ைப் பெருமையும் வெற்றிச் சிறப்பும் பிற்வேந்தருடைய உள்ளத்தில் உட்குத் தோற்று விக்கும் வகையில் இப்புலவர் முதலியோர் செயல் நிகழ்ந்து