பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

23

அழகாகவும் திறமையாகவும் பாப்புனையப் பயன்படுகிறது. சொற்கள் அழகாகவும் சீராகவும் அமைகின்றன. மிக எளிமையாகப் பின்னப்படுகின்றன. எவ்வித முயற்சியுமின்றி இயல்பாக அமைந்தனபோல் தோற்றமளிக்கின்றன. அதே நேரத்தில் வெண்பா அமைப்பில் சிறிதும் வழுவாது ஒழுங்குற அமைந்துள்ளன.

இயல்பான உணர்ச்சியும் திறமான பயிற்சியும் பின்னி அழகான கவிதை பிறக்கிறது. கடுஞ்சொற்கள் வழக்கிழந்த, சொற்கள் இல்லாமல் நடைமுறையில் உள்ள எளிய சொற்களில், எதுகையும் மோனையும் தேடாமலே வந்து கூடி ஒரு மோகனப்பாட்டை உருவாக்கித் தருகின்றன.

பாட்டின் தொடக்கமே எவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் அமைந்துள்ளது என்று பார்த்தால் புரியும்.

காலையிளம் பரிதி வீசும் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாம் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை.
(குயில்)

குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோல மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; சுண்ணாடி போன்ற நீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு;
பூக்கள் மணங்கமழும், பூக்கள்தொறும் சேன்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்.