பக்கம்:மாயக் கள்ளன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இவ்வாறு பதிைேரு மாதங்களுக்கு மேல் சென்றுவிட்டன. இன்னும் சில நாட்களில் சுந்தரி அந்தத் தனி மாளிகையை விட்டு வெளியே வந்து அனேவரையும் பார்க்கலாம். அந்த நாளே அவள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். கமலாபுரிக்கு அருகிலே மற்ருெரு நகரம் இருந்தது. அதற்கு மதியழகாபுரி என்று பெயர். அதை ஆண்டுவந்த அரச னுக்கு ஒரு மகனிருந்தான். அவன் பெயர் மணிவண்ணன். அவன் இசைக்கலேயிலே மிகச்சிறந்தவன். அவனேயே கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று சுந்தரி விருப்பங்கொண்டிருந் தாள். மணிவண்ணனுக்கு அவளேக் கலியாணம் செய்துகொள்ள ஆசை. அவர்களுடைய பெற்ருேர்களும் இந்தக் கலியாணத் திற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்கள். ஆதலால், அவர் களுடைய விருப்பத்திற்கு யாதொரு தடையும் இருக்கவில்லை. மணிவண்ணன் கமலாபுரிக்கு வரும்போதெல்லாம் சுந்தரியைச் சந்திப்பான். ஆனல், இந்த ஒரு வருஷமாக அவளைச் சந்திக்க முடிய வில்லே. அவள் தனியாக ஒரு மாளிகையில் கோட்டையின் உச்சியிலே இருப்பதாக அறிந்தான். ஆண்கள் யாரும் அவளேப் பார்க்கக்கூடாதென்ற விஷயத்தையும் தெரிந்துகொண்டான். அவள் தனது பதினெட்டாம் வயதிலே எந்த ஆணப் பார்க்கிருளோ அவளுல் அவளுக்கு மரணம்: நேரும் என்று முனிவர் கூறியதைப்பற்றியும் கேள்விப்பட்டான். இருந்தாலும், சுந்தரியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு அதிகமாக இருந்தது. இன்னும் சில நாள்கள் பொறுத்திருந்தால் அவளுக்கும் பதினெட்டாவது வயது பூர்த்தியாகிவிடும். ஆனால், அதுவரையில் அவளேப் பார்க்காமல் பொறுத்திருக்க அவனுல் முடியவில்லே, அவள் தன்னப் பார்க் காமல் தான் மட்டும் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று அவன் ஆசை கொண்டான். அதற்காக அவன் ஒரு தந்திரம் செய்தான். மரப்பலகைகளேக் கொண்டு மிகப்பெரிய மயில் போன்ற ஓர் உருவத்தைச் செய்யும்படி அவன் தச்சர்களுக்கு ஆணேயிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/51&oldid=867713" இலிருந்து மீள்விக்கப்பட்டது