பக்கம்:மாயக் கள்ளன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 நிறமாக இருந்தது. அது மெதுவாகத் தண்ணீரில் மிதந்து கொண்டே, சின்னப் பாப்பா படுத்துக்கொண்டிருந்த செந்தா மரைப்பூவினிடம் சென்றது.

சின்னப் பாப்பாவுக்கு நீலத் தாமரையைக் கண்டதும் அதன்மேல் ஆசை உண்டாயிற்று. சின்னப் பாப்பா பொன் வண்டாக மாறியிருந்ததல்லவா? அந்தப் பொன்வண்டு இறக்கையை விரித்துப் பறந்து வந்து, நீலத்தாமரையின் மேல் உட்கார்ந்தது. உடனே நீலத்தாமரை அதன் இதழ்களையெல்லாம் மூடி, அந்தப் பொன்வண்டை இதழ்களுக்குள்ளேயே சிறைப்பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் முழுகிவிட்டது.

நீலத்தாமரை தண்ணீருக்குள் முழுகியதும், ஒரு கெண்டை

மீனாக மாறிக்கொண்டது. பொன் வண்டாக இருந்த சின்னப் பாப்பா அதன் வயிற்றிலே கிடந்து திண்டாடியது .

மந்திரவாதியின் தந்திரத்தை அறிந்த தேவதை, ஒரு பெரிய சுறாமீனாக வடிவவெடுத்துக் குளத் திலே பாய்ந்து, முழுகிக் கெண்டை மீனைத் துரத்திற்று. கெண்டை - -- மீன் பயந்து நடு நடுங்கித் தண்ணீரை விட்டு வெளியே பாய்ந்தது. வெளியே பாய்ந்ததும் அது ஒரு சிட்டுக்குருவியாக மாறி, ஒரு பெரிய மாமரத்தைநோக்கிப் பறந்தது. இதைக் கண்டு தேவதை, பருந்தாக வடிவமெடுத்துப் பின்னாலேயே வந்தது.

மந்திரவாதி, சிட்டுக்குருவி வடிவத்தை விட்டுவிட்டு, மா மரத்தின் கிளையொன் றிலே ஒரு மாம்பழமாகத் தொங்கினான். சின்னப் பாப்பா அதன் உள்ளே வண்டாகக் கிடந்தது. அதற்கு மூச்சு விடக்கூட முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/26&oldid=1276965" இலிருந்து மீள்விக்கப்பட்டது