பக்கம்:மாயக் கள்ளன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. தந்திரக் கதை

குழந்தையாக இருந்த ஆத்மரங்கனுக்கு மாயக்கள்ளன் பலவிதமான வேடிக்கைகளேயெல்லாம் காட்டிக்கொண் டிருந்தான். அதனல் ஆத்மரங்கன் மலேயுச்சியை மறந்து விட்டு உலகப் பொருள்களிலே கவனத்தைச் செலுத்தலான்ை. மாயக்கள்ளன் அவனத் தனது மாய வலைக்குள்ளே நன்ருக இறுக்கிக் கட்ட முயற்சி செய்துகொண்டிருந்தான். மாயக் கள்ளனுடைய வலே, சிலந்திக் கூடு போல், மெதுவாக ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தையைச் சுற்றிப் படர்ந்தது. முதலில் லேசாக இருந்த வலே, நாளாக ஆகக் கெட்டியாக மாறலாயிற்று. இருந்தாலும், அந்தக் குழந்தை மலேயுச்சியை முற்றிலும் மறந்துவிடவில்லே. ஒவ்வொரு சமயத்தில் அதை நினைத்துக் கொண்டு அது ஓயாமல் அழுத்தொடங்கும். குழந்தை எனப்படி அழுகிறதென்று யாருக்குமே தெரியாது. ஆல்ை, குழந்தைமட்டும் அழுதுகொண்டேயிருக்கும். அந்தச் சமயத் திலே மாயக்கள்ளன் அதற்கு எதாவது வேடிக்கை காட்டி, அதன் அழுகையை நிறுத்த முயல்வான். மலேயுச்சியை மறக்கும்படி செய்வான். இப்படிச் செய்து ஒரு தடவை குழந்தையை நன்ருகத் தூங்கும்படி சூழ்ச்சி செய்துவிட்டான். குழந்தையாகவே இருந்தால் மலேயுச்சிக்குப் போக முடியாது என்று ஆத்மரங்கனுக்குத் தெரிந்துவிட்டது. சிறு பையனுக இருந்தால் மலேப்படிகளிலே, யாருடைய உதவியு மில்லாமல் ஏற முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. குழந்தையாக இருந்தால் அப்படித் தானகவே ஏற முடியாது என்றும் அவன் தினத்தான். அதல்ை அவன் பன்னிரண்டு வயதுள்ள சிறுவகை மாறினன். சிறுவகை மாறியதும் அவன் மலேயடிவாரத்திற்கு ஓடினன். மலேப்படிகளிலே சுறுசுறுப்போடு காலெடுத்து வைத்தான். மலேயேறுவது முதலில் அவனுக்கு விளேயாட்டாகத் தோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/29&oldid=1276962" இலிருந்து மீள்விக்கப்பட்டது