உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐது என்ன உறக்கமோ 3

அவளுேடு சார்ந்த ஒப்பற்ற பொருள்களையும் பாடினேமே:

கேட்க வில்லையா?*

கேழ்இல் பரஞ்சோதி, கேழ்இல் பரங்கருணை, கேழ்இல் விழுப்பொருள்கள் பாடினேம்; கேட்டிலையோ!

'இதற்கெல்லாம் உன் ஆழ்ந்த உறக்கந்தான் காரணம். நீ வாழ்க, அந்த உறக்கத்தைத்தான் சொல்லவேண்டும். இது என்ன மயக்கம் தரும் உறக்கமோ தெரியவில்லை.”

வாழி:ஈ தென்ன உறக்கமோ? - -

" உன் வாயிலைத் திறந்து எங்களோடு சேர்ந்து பாடுவாயாக.”

"உன் வாய் திறவாய் என்பதற்கு உன் வாயைத் திறந்து எங்கள் கேள்விக்குப் பதில் சொல்வாய்' என்றும் பொருள் கொள்ளலாம்,

ஆழி என்பது சக்கரம். ஆழியான் என்பதை உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் ஆக்ஞாசக்கரத்தை உடைய வன் என்றபடி. ஊழி முதல்வன் எனபது காலம் கடந்தவன் என்பதைக் குறித்து நின்றது. நின்ற-நிலையாகச் சலனமின்றி நின்ற. ஒருவன-ஒப்பற்றவனே. ஏழைபங்காளன் - உமா தேவியைப் பாகத்திலே கொண்டவன்; தீனதயாளன் என்றும் கொள்ளலாம்,

இறைவனே எங்களோடு வந்து சேர்ந்துகொண்டு பாடு வாயாக என்பது கருத்து

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்; ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்குளங்கும்; கேழ்இல் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழ்இல் விழுப்பொருள்கள் பாடிளுேம்; கேட்டிலையோ? வாழி:ஈது என்ன உறக்கமோ? வாய்திறவாய், ஆழயான அன்புடைமை ஆமாறும் இவ்வாருே? ஊழி முதல்வனுய் கின்ற ஒருவனே . - ஏழைபங் காளனேயே பாடேலோர் எம்பாவாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/44&oldid=579237" இலிருந்து மீள்விக்கப்பட்டது