பக்கம்:மாயக் கள்ளன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பல பேர் அவருடைய பாடலைக் கேட்டு ஆனந்தமடைந் தார்கள், அவர் ஒரு சமயம் வெகு தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஒரு பெருமாள் கோயில் விட்டு மற்றொன்றிற்குப் போவதற்குப் பல நாட்கள் ஆயின. வழியிலே ஒரு பெரிய கானகம் இருந்தது. அதற்குள் புகுந்து அவர் நடந்துகொண்டே இருந்தார். இரண்டு மூன்று நாள்கள் ஆகியும் அவரால் அந்தக் கானகத்தைக் கடக்க முடியவில்லை. அந்த மூன்று நாள்களும் அவர் பட்டினி. அவருக்கு உணவு

கிடைக்கவில்லை. நான்காம் நாள் அவர் ஒரு பெரிய ஆலமரத்தின்கீழ்ப் படுத்தார். உச்சிவேளையாகிவிட்டபடி யால் அவரால் நடக்க முடியவில்லை. பசியும் வெயிலும் அவரை வாட்டின. அதனால், அவர் ஆலமரத்தடியில் படுத்து இளைப்பாற விரும்பினார். அந்தச் சமயத்தில் அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 'யாராவது இப்பொழுது உணவு கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!' என்று அவர் எண்ணினார். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும்போதே அங்கே ஒருவர் வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/107&oldid=1277025" இலிருந்து மீள்விக்கப்பட்டது