32
கீழ் கடற்கரை வழியே தன் குதிரையின்மேல் ஏறிப் பாண்டி நாடு முழுவதையும் அடிப்படுத்திக் கொண்டு, அப்படியே மேல் கடற்கரைக்குச் சென்று சேர நாட்டையும் பணியச் செய்து, வடக்கு நோக்கியும் வந்தால் என் செய்வோம்! அவன் வலம் வரும் செயலை மேற்கொண்டால் நம்முடைய வலிமையெல்லாம் எந்த மூலை?” என்று அஞ்சி அவர்கள் உறங்காமல் இருக்கிறார்கள்.
கோவூர் கிழார் பாட்டில் இந்தக் கருத்துக்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.
கோவூர் கிழார் இன்னும் சில பாடல்களைப் பாடினார். அவனிடம் பரிசு பெறுவதற்காக் வரும் கலைஞர்களே நோக்கிப் பாடும் முறையில் ஒரு பாட்டுப் பாடினர். “பரிசில் பெறுவதற்குரிய கலைஞர்களே! வாருங்கள்; நாம் நலங்கிள்ளியைப் பாடுவோம். அவன் தன்னுடைய நாட்டை வளம் படுத்திய சிறப்பைப் பார்த்தீர்களா? எங்கே பார்த்தாலும் வயல்கள் நிரம்பியது சோழநாடு. வெறுங் களிமண்ணைக் கொண்டு குயப்பிள்ளைகள் எவ்வளவு அழகான உருவங்களே ஆக்கிவிடுகிறார்கள்! மக்களுக்குப் பல வகையில் பயன்படும்படி செய்துவிடுகிறார்கள் அல்லவா? அவ்வாறே அம் மன்னன் சோழ நாட்டை மிகச் சிறப்புடையதாக்கிவிட்டான். அதன் பெருமையை உலகு முழுவதும் தெரிந்துகொள்ளும்படி செய்திருக்கிறான். இத்தகைய வளநாடு அவனுக்கு இருப்பதனால் மற்ற நாடுகளையும் அங்குள்ள நகரங்களை