உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோவூர் கிழார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

மெலிந்திருந்தன. அடிக்கடி பசி தாங்காமல் ஆர்த்தன. மகளிர் முகத்தில் ஒளியே இல்லை. வேண்டிய அளவு சோறு, தண்ணீர் இல்லாமல் மக்கள் வருந்தினார்கள். அவருக்கே துயரம் பொறுக்கவில்லை. நெடுங்கிள்ளியை அணுகினார். அவர் முன் அமர்ந்தார்.

“அரச குலத்திலே பிறந்து மிக்க வலிமையோடிருக்கும் தலைவன் நீ; இங்கே நீயாக மேற்கொண்ட சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறாய் இது தகுமா?” என்று கேட்டார்.

“அரசர்களுக்கு வழக்கமான செயல்தானே இது?” என்றான் நெடுங்கிள்ளி.

“அரசருக்கு இது வழக்கமென்கிறாயே! இங்கே உன்னைச் சூழ இருக்கும் காட்சிகளைப் பார்த்தாயா? உன்னுடைய படையிலுள்ள யானைகள் எப்படி இருக்கின்றன? அவை முன்பு எப்படி வாழ்ந்தன? எண்ணிப் பார். தினந்தோறும் பெண் யானைகளின் கூட்டத்தோடு களிறுகள் குளத்துக்குச் சென்று படிந்து நீராடி இன்புறும். நெல்லைக் கதிரோடு தின்னும் சோழ நாட்டு யானைகள் அல்லவா அவை? நெய்யும் சோறுமாகப் பிசைந்து தரும் கவளத்தை உண்டு நடைபோடும் அவை இப்போது எப்படி இருக்கின்றன? கட்டுத் தறியை முறித்துத் தும்பிக்கையை நிலத்திலே புரளவிட்டுத் தடவுகின்றன. அடிக்கடி பெரு மூச்சு எறிகின்றன. பசி தாங்காமல் இடிபோல முழங்குகின்றன. இவ்வளவு காலமும் இன்புற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/48&oldid=1111065" இலிருந்து மீள்விக்கப்பட்டது