பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையேறும்போது


க்கினி நட்சத்திரம். வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் உருவில்லாத ஒரு ஜூவாலே தக தகவென்று மேலெழும்புவது போல் காணப்படுகின்றது. அது கானல் நீர்; பேய்த் தேர். அது அலையலையாக மேலெழுகின்ற உச்சி வேளையிலே பூமா தேவி மூர்ச்சையுற்றவள்போல் அசைவற்றுக் கிடக்கிறாள்.

ஆனால், இந்த வெயிலிலும் பழநியங்கிரியிலே பக்தர்களின் கூட்டத்திற்கும், உற்சாகத்திற்கும், முழக்கத்திற்கும் குறைவே இல்லை. சித்திரை இறுதி வாரத்திலும், வைகாசி முதல் வாரத்திலும் அங்கு வந்து குழுமுகின்ற மக்களின் எண்ணிக்கையைச் சொல்லி முடியாது. பயணத் தொல்லையோ, வெயிலின் கொடுமையோ அவர்களை எவ்விதத்திலும் தடைப்படுத்துவதாகக் காணோம். அவர்களுடைய பக்தியைச் சோதிக்கவே இறைவன் இவற்றையெல்லாம் உண்டாக்கியிருக்கிறான் என்பது அவர்கள் எண்ணம் போலும். அதனால் அக்கினி நட்சத்திரத்தின்போது பழநியில் ஒரே கூட்டம்.

'அரஹரா, அரஹரா' என்ற பக்தி வெள்ள முழக்கம் இடைவிடாமல் எழுகின்றது. 'வேலும் மயிலும், வேலும் மயிலும் - சாமியே சரணம்' என்று மலையாளத்துக்காரர்கள் மெய்மறந்து கூவு-