இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே அவளுக்குப் புலப்படவில்லை. துக்கம் அப்படி அவளைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. அவள் கண்களிலே கண்ணீர் வழிந்தோடலாயிற்று.
ஆனால், சற்று நேரத்திலே அவளுக்கு ஒரு தெளிவு பிறந்தது. இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று அவளுக்குப் புலப்பட்டது. அதனால் அவள் உடனே செயலில் இறங்கினாள். தங்கமணிக்குக் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் முதலில் எழுதினாள்.
அருமைக் குழந்தைகளே,
- நீங்கள் அனுப்பிய செய்தி கிடைத்தது. அந்தக் குள்ளன் அப்பாவையும் ஏமாற்றி எங்கோ அழைத்துக்கொண்டு போய்விட்டான். ஆனால் நீங்கள் தைரியமாய் இருங்கள். இப்பொழுதே ஒரு பரிசலில் சில போலீஸ் வீரர்களை உங்களுக்கு உதவி செய்ய அனுப்புகிறேன். அப்பாவைக் கண்டுபிடிக்கவும், குள்ளனைக் கைது செய்யவும் முயற்சி செய்கிறேன். போலீஸ் வீரரோடு காரிலேயே புறப்பட்டு, கொல்லி மலைக்கு மறுபக்கத்தில் உள்ள கூடல் பட்டணத்திற்கு நான் வந்து சேருவேன். அங்கே சந்திப்போம். கடவுளை நம்பி. தைரியத்தை விடாமல்