28
இயேசு தான் அது என்று தெரிந்து கொண்டார்.
"நான் அல்லவா உன்னால் தூய்மைப்படுத்தப்பட வேண்டியவன்; நீ என்னிடம் வருவது பொருந்துமா?” என்று கேட்டார் ஜான்.
உண்மைதான். ஆண்டவனின் மகனாகப் பிறந்த இயேசு எந்தப் பாவமும் புரிந்தவரல்லர். இருப்பினும் அவர் தாம் திருமுழுக்காட்டப்பட வேண்டும் என விரும்பினார். தாம் வைத்திருந்த தச்சுக் கருவிகளை அப்பால் போட்டு விட்டு அவர் திருமுழுக்காடுவதற்கு ஆயத்தமாக நின்றார்.
இயேசுவின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல், ஜான் அவரையும் ஆற்றிலே இறக்கித் திருமுழுக்காட்டினார். அவர் ஆற்றில் முழுகி எழுந்து கரையேறிய பொழுது வானில் திடுமென ஓர் ஒளி மின்னியது. புனித ஆவி ஒரு புறாவின் வடிவில் அவர் மீது வந்து அமர்ந்தது. அதே சமயம் "நான் மிகவும் விரும்புகின்ற என் அருமை மகன் இவனே" என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலித்தது. ஆம், வேதங்களால் முன்னறிவிக்கப்பட்ட திருமகன் வந்துவிட்டார். அவருடைய