பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 நாட்டில் உயர்ந்த கவிஞர்கள் இல்லாமல் போய் விட் டார்கள். நோய் கொண்ட மாமரத்திலே நல்ல பழம் எங்ங்ணம் தோன்றும்? மரத்தின் நோயைத் தீர்த்தல்லவோ பிறகு கனியினுடைய ருசியைப் பார்க்க வேண்டும்? தமிழர் களைப் புனிதப்படுத்திப் பிறகு பார்த்தால் தமிழ்ப் பாஷையின் நறுமணம் விளங்கும். தமிழர்கள் நேர்மை யாய் இருந்த காலத்தில் திருத்தக்க தேவர், இளங்கோ, கம்பர் முதலிய எண்ணிறந்த தமிழ்ப் புலவர் இருந்து அருமையான தெய்வீகப் பா ட ல் க ள் பாடியிருக் கிரு.ர்கள். வா : சும்மா ஸ்தோத்திரம் பண்ணுதேயும்; கம்பன் டம்பன் எல்லாம் நானும் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். புல அப்பா தயை செய்து உளருதே. காலேஜு களிலே கம்ப ராமாயணம் சொல்லித் தரப்படும் மாதிரி யிலே உனக்கும் உன்போன்ருேர்க்கும் தமிழ்ப் புலவர்களி டம் வெறுப்பு ஏற்படுதல் சகஜமேயாம். எனினும், போப் முதலிய ஆங்கிலேய வித்வான்கள் கூடப் பண்டைத் தமிழ் புலவர்களின் ஆழ்ந்த கருத்துக்களையும் பெருமைகளையும் கண்டு மிகுந்த வியப்படைகிரு.ர்கள். கம்ப ராமயணத்திலே வலீதை தனியாக அசோக வனத்திலே இருக்கும்போது ராமபிரான் அவ்வப்போது செய்த செய்கைகளையும் விளையாடிய விளையாட்டுக்களையும் நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருப்பதாகச் சில பாடல்கள் சொல்லப்படுகின்றன. அதிலே ஒரு பாட்டை உனக்கு எடுத்துச் சொல்லிப் பொருள் கூறுகின்றேன். அது பூரீராமன் பட்டாபிஷேகம் பெறும்படி கட்டளை இடப்பட்ட காலத்திலேயும், ராஜ்யத்தை விட்டு வனந்தரம் செல்' என்று கட்டளையிடப்பட்ட போதும் ஒரே மாதிரி மனமுடையவகை முகம் மலர்ந்திருந்த வியப்பை nதை