உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



41


அமைச்சர் சிந்தித்தார் துணி கண்ணுக்குத் தெரியவில்லை என்று சொன்னால், அரசர் தான் கடமை தவறியவன் என்றோ, அறிவற்ற முட்டாள் என்றோ எண்ணிவிடக், கூடும். ஆகவே, தான் உடையைப் பார்த்ததாகவே காட்டிக் கொள்ள வேண்டும் என்று மனத்துக்குள் முடிவு செய்து கொண்டார்.

“பெருமானே, துணிஎப்படியிருக்கிறது?” என்று கேட்டான் பத்தன்.

“தளதள வென்று பட்டுப் போல் இருக்கிறது” என்றார் அமைச்சர்

“தையலைப் பற்றித் தாங்கள் ஒன்றும் சொல்ல வில்லையே!” என்று வினவினான் சித்தன்.

“சீராக இருக்கிறது” என்றார் அமைச்சர்.

“பெருமானே துணியின் நிறம் எப்படியிருக்கிறது?" என்று கேட்டான் முத்தன்.

“பொன்னின் வண்ணம் தான்!” என்று அமைச்சார் பராட்டினார்.