உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்துக்குக்கூட இப்படி யென்றால், இனிக் கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கணிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதினால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம், லக்னப் பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே கார்ய நஷ்டம் மட்டுமின்றி, மேற்படி லக்னம் முதலியன பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.

"காலம் பணவிலை யுடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்றிருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின், அதனால் பணலாபம் கிடையாமற் போகும். இன்று செய்யக்கூடிய கார்யத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப் படுத்தி வைப்பதனால், அந்தக் கார்யம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும் அதைத் தூங்கப் போட்டு விட்டபிறகு செய்யப்போனால் அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறை வெய்தும்.

"இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்பட்டிருக்கின்றன' என்றும், 'ஜனங்களுக்கும்