பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 முக்கியமாக அன்று பிரிட்டிஷ் பிரதம மந்திரியாகிய லாய்ட் ஜார்ஜையே தமது இலக்காகக் கொண்டிருக் கிருர். லாய்ட் ஜார்ஜும் அவருடைய ஐர்லாந்துக் கொள் கையும் என்ற கட்டுரையில் கிண்டல்களும் நையாண்டியும் கலந்து வன்மையாகக் கண்டிக்கிருர். இப்படிப்பட்ட பிரதம மந்திரியிடமிருந்து நாம் ஸ்வராஜ்யம் எதிர் பார்க்கவே முடியாது என்று மக்கள் மனதில் நன்கு பதிய வைக்கிருர் பாரதியார். ம. க் க ளி ட த் தே விடுதலை வேட்கையைப் பரப்ப வேண்டும் என்பதே உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் பாரதியாருக்கு நிபந்தனைகள் என்ன செய்ய முடியும்? நிபந்தனைகள் ஒரு புறம் இருக்க மறு புறத்திலே பாய்கின்ருர் பாரதியார், சுதேசமித்திரன் போன்ற மி த வா த நாளிதழ்களும் வெளிநாட்டுக் கொள்கைதானே பாரதியார் விருப்பப்படி எழுதவிட்டு விடலாம் என்று நினைத்தனபோலும் ஐர்லாந்தும் இந்தியாவும் என்று 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் 19 - ந் தேதி வெளி வந்த கட்டுரையின் மேலும் ஒரு பகுதியை இங்கு எடுத்துக் காட்டுக்காகக் காண்பிக்கப்படுகின்றது. 'ஐர்லாந்துக்கு ஏறக்குறைய இந்தமுறை ஸ்வராஜ்யம் கொடுத்துத்தான் திர வேண்டுமென்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் அமெரிக்கா சும்மா விடாது. கானடா சும்மாவிடாது. ஆஸ்திரேலியா, தென் ஆபிரிகா, நியூஜி லாந்து முதலிய குடியேற்ற நாடுகள் பொறுத்திருக்க மாட்டா. ப்ரான்ஸிடம் விடுதலைப் ப்ரஸ்ங்கங்களை விரிக்க இங்கிலாந்துக்குச் சிறிதேனும் இடமில்லாமற் போய்விடும். உலகமுழுமையிலும் அபகீர்த்தி முற்றும். இங்கிலாந்தின் சத்ருக்கள் பெருமகிழ்ச்சியடைய ஹேதுவுண்டாகும். இத்தனை உதவிகளுமில்லாது போயிலும் இப்போது ஸ்வராஜ்யம் கொடுக்காவிட்டால், ஐர்லாந்து சும்மா இராது. ஸ்வராஜ்யத்தை வ ற் பு று த் தும் பொருட்டு