பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்து ஏழெட்டு மாதம் ஆனபின் குழந்தை நன்ருக உட்காரப் பழகிவிடு கிறது. தரையிலும், அன்னை மடியிலும், தந்தை தோளிலும் அமர்ந்து ஆனந்தம் ஏற்படும் போது தன்னிரு கையும் சேர்த் துத் தாளம் போட்டு மகிழ்கிறது. பஞ்சினை யொத்த மென்மையும் பிஞ்சினை யொத்த தன்மையும் கொண்ட சிறு கைகளால் அது சப்பாணி கொண்டும் அழகைக் கண்ட தாயின் மகிழ்ச்சி கரை புரண்டோடுகிறது. 4. சிரித்துக் கொட்டு சப்பாணி. செந்தா மரைபோல் முகமலரச் சிரிக்கும் அழகே ஓவியமே நந்தா விளக்கே வாழ்வினிலே நாளும் ஒளிரும் திருச்சுடரே செந்தா மரைப்பூக் கையிரண்டும் சேர்த்துக் கொட்டு சப்பாணி திருவாய் மலர்ந்து பூரித்துச் சிரித்துக் கொட்டு சப்பாணி. நெஞ்சில் இன்ப ஒளிசேர்க்கும் நித்தில மேஎன் செந்தேனே கொஞ்சிப் பேசப் பிறந்திருக்கும் கோலப் பச்சைப் பசுங்கிளியே பஞ்சு போன்ற கையிரண்டும் பழுக்கக் கொட்டு சப்பாணி பனிவாய் மலர்ந்து சிரிப்பள்ளிப் பாய்ச்சிக் கொட்டு சப்பாணி. வெல்லப் பாகே புன்சிரிப்பை விரித்து நெஞ்சைக் கொள்ளைகொளும் செல்லக் கிளியே பசும்பொன்னே சித்திரப் பூவே திருவிளக்கே செல்லப் பிஞ்சுக் கையிரண்டும் சேர்த்துக் கொட்டு சப்பாணி திருவாய் மலர்ந்து பூரித்துச் சிரித்துக் கொட்டு சப்பாணி. 119