பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 71 பொன்னப்பன், தன் நண்பனைக் காணுதற்காகத் தஞ்சைக் கேகுகிறான். அங்கே காதலை ஒரு காலத்தில் தூற்றிப் பேசிய முத்தப்பன், தற்போது போற்றிப் பேசுவதைக் கேட்டு வியக்கிறான். காரணம்: தஞ்சையில் முத்தப்பன் - அரசிளங்குமரி முல்லையர்தம் காதல் முகிழ்த்து வளர்ந்து மலர்ந்து மணந்து நிற்கிறது. அரண்மனை இளவரசியின் காதல் தன் அன்பன் முத்தப்பனுக்குக் கிடைத்ததை எண்ணிப் பொன்னப்பன் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவன் மகிழவில்லை! கடுகுபோல் சின்ன மனம் கொண்ட பொன்னப்பன், 'குடிலன்’ ஆகிறான். சதிகள் தொடருகின்றன. முத்தப்பன் நாடு கடத்தப்படுகிறான். பிரிந்த காதலன், திரும்பி வாராமை, மதுரைத் தாமரையை அங்கிருந்து விரட்டுகிறது. ஆண் வேடத்தில் தலைவனைத் தேடித் தையல் தஞ்சை அடைகிருள். அங்கே - பொன்னப்பன், முத்தப்பன் பிரிவில் தவிக்கும் முல்லையை அவள் விருப்பத்திற்கு மாறாகச் சுற்றி வருவதை நேரில் காண்கிறாள் தாமரை! முல்லையிடம் தான் யார் எனப் புலப்படுத்திக் கொள் கிறாள். 'என் காதல் போயினும் உன் காதலை வெற்றி பெறச் செய்வேன்” என்று முல்லையிடம் வஞ்சினம் மொழிந்து விட்டு முத்தப்பனைத் தேடிப் புறப்படுகிருள்.