பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை புதுச்சேரியிலே பாாதியார் வாழ்ந்திருந்த நாளிலே 1916ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதியன்று ஒர் பயங்கர மான புயல் வீசிற்று. பாரதியார் எழுதுவதுபோல ஊழிக்காற்று;-படில், படில், படில், வீடுகள் இடிந்து விழுகின்றன, மரங்கள் சாய்கின்றன. இது மருத்துக்களின் களியாட்டம் என்கிருர் நமது கவிஞர். பூமியே நடுங்குவதுபோல இருந்ததாம். இத்தனை அழிவுக்கு இடையிலும் பாரதியாரின் சிரிப்பும், தமாஷாம் குறையவில்லை. திக்குகள் எட்டும் சிதறி என்று தொடங்கும் புகழ்பெற்ற கவிதை உருவாகின்றது. அந்தக் கவிதை வரிகளை உணர்ச்சி யோடு பாடினல் புயல் காற்று வீசுவதும். "கூகூவென்று விண்ணக் குடையது காற்று சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்." என்கின்ற பெரும் புயலையும், மழையையும் நேரே கண்முன்பு &SİT68örşı)nrıh, பாரதியாருக்கு இரண்டு இடங்களிலே கோபம் பொங்கி எழுந்து வரும். தமிழை இழிவாகப் பேசிவிட்டால் எரிமலை போல வெடித்து விடுவார் நம் கவிஞர். தமிழ் என்ற கட்டுரையிலே, இந்துக் கல்லூரி பேராசிரியராக விளங்கும் நீலகண்ட ஐயரை அதல பாதாளத்திற்கு இறக்கி விடுகின்ற