உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமரம்

தெருவி லுள்ள மாமரம்
தின்னத் தின்னப் பழங்களை
அருமை யோடு தந்திடும்.
அதனை ராமு பார்த்தனன்.

கல்லைக் கையில் எடுத்தனன்;
கையை நன்கு ஓங்கினன்;
பல்லைக் கடித்துக் கொண்டனன்;
பலமாய் வீசி எறிந்தனன்.

விட்ட கற்கள் பழங்களை
வீழ்த்தி விட்டுக் கிளைகளில்;
பட்பட் டென்று மோதின.
பட்டை யாவும் பெயர்ந்தன;

ஆசை கொண்டு கற்களை
அள்ளி அள்ளி வீசினன்
வீசி எறிந்து பட்டைகள்
மிகவும் பெயரச் செய்தனன்.


55