உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரனின் ஆசை

நாட்டுக் காக ஒருவீரன்
நான்கு ஆண்டுகள் போர்செய்து,
வீட்டை நோக்கித் திரும்பினனே,
வெற்றி கொண்டு மகிழ்வுடனே.

வந்திடும் வழியில் ஓர்ஊரில்
மக்கள் வீரனை வரவேற்றுத்
தந்தனர் பாலும் பழங்களுமே,
சந்தோ ஷத்துடன் உண்டிடவே.

‘எதுவும் வேண்டாம் இவற்றினிலே,
எனக்கு வேண்டிய தொன்றேதான்.
அதுவே நான்கு ஆண்டுகளாய்
அடியேன் தினமும் வேண்டுவது.

நாட்டைக் காக்கப் படைதிரட்டி
நாங்கள் சென்ற அச்சமயம்,
வீட்டில் எனது குழந்தையினை
விட்டு வந்தேன், வாட்டமுடன்.


79