பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

சைவ இலக்கிய வரலாறு

களுட் சில கல்வெட்டுக்களில் எடுத்தாளப் பெறுகின்றன, கோயில் நான்மணிமாலையில் உரையின் வரையும் : எனத் தொடங்கும் திருப்பாட்டில்[1] இறைவனது தசாங்கத்தைப் பாடலுற்ற அடிகள், அவனது ஆணையை "விரையாக் கலியெனும் ஆணை என்று குறிக்கின்றார். இதனைக் கி. பி. பத்து முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த உத்தம சோழன், முதல் இராசேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர் காலங்களில் திருமாணிகுழி, திருவதிகை, திருப்புறம்பயம் முதலிய இடங்களில் தோன்றிய கல்வெட்டுக்கள், விரை யாக் கலியென்னும் இவ்வாணையை எடுத்தோதுகின்றனர். இப்பெயரால் விரையாக்கலி நிறைக்கோல், விரையாக்கலிப் பெருந்தெருவு எனப் பொருள்களும் இடங்களும் இருந்திருக்கின்றன. திருவிரையாக்கலி திருக் கண்ணப்பதேவர் ஸ்ரீபாதம்”[2] என இது சிறப்புப் பெயராகவும் வழங்கி யிருக்கிறது.

இனி, அடிகள் திருஞான சம்பந்தர் முதலிய தேவார ஆசிரியர் மூவரையும் 'முத்திறத்து அடியார்'[3] என்று வழங்கினாராக, சிதம்பரம் கல்வெட்டுக்களும் திருப்புறம் பயத்துக் கல்வெட்டுக்களும் அத்தொடரை எடுத்தாளுகின்றன. தில்லையிலுள்ள கூத்தப் பெருமானே, உய்யக் கொண்ட செல்வர் [4]' என்றும். ' நடன் நம்பிரான் உகந்து உய்யக் கொண்டான்'[5] என்றும் அடிகள் சிறப்பித் துரைக்க, அத்தொடரை வியந்து, சோழவேந்தனான முதல் இராசராசன் தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகக் கொண்டான். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருக்கற்குடி என்னும் கோயிற்குத் திருப்பணி செய்து, அக்கோயில் இறைவனை உய்யக் கொண்ட நாயனார்' என்று பெயர்

-


  1. 1.கோயில். 4.
  2. 2.S. I. I. Vo]. VIII. No. 319.
  3. 3. திருவிடை. மும். 28.
  4. கோயில். 7.
  5. திருவேகம். அங். 47.