பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சைவ இலக்கிய வரலாறு

அவர்களுடைய பெயரிடப் பெற்றிருப்பது கண்கூடு. இந்தச் செயல் நம் நாட்டு மக்களின் பொதுப்பண்பு. இப்பண்பு இன்று நேற்றுத் தோன்றியதாகாது. பண்டிருந்தே தொன்று தொட்டு வந்ததாகும். ஆதலால், ஞானசம்பந்தர் தோன்றி, ' இன்னிசையால் தமிழ் பரப்பும் ' பெருங்தொண்டு செய்தது குறித்து, அவர்பால் மக்கட்குண்டான பேரன்பால், திருஞான சம்பந்தனல்லூர்[1] திருஞான சம்பந்த சதுர்வேதி மங்கலம்[2]’ என ஊர்களும், திருஞான சம்பந்த வளாகம்[3] திருஞானசம்பந்தன் தளம்[4] என இடங்களும், திருஞானசம்பந்தர் கோயில்[5] திருஞானசம்பந்தீஸ்வரம் எனக் கோயில்களும், திருஞானசம்பந்தன் மடம்[6] திருஞானசம்பந்த நம்பி மடம் செல்வஞானசம்பந்தர் மடம்[7] சீகாழி நாடுடைய பிள்ளை திருமடம். பரசமய கோளரிமடம் [8]திருஞான சம்பந்தர் திருக்குகை'[9] என மடங்களும், திருஞானசம்பந்தர் நந்தவனம்[10] திருஞான சம்பந்தர் மடப்புறம்' என நந்தவன முதலியனவும் பல காலங்களில் பல மக்களால் நிறுவப்பெற்றுள்ளன. இவ்வாறே, திருஞானசம்பந்தன் மடை'திருஞானசம்பந் தன்நாழி[11] என வேறு பலவற்றிற்கும் ஞானசம்பந்தர் பெயர் வழங்கப்பெற்றுளது. - -

திருஞானசம்பந்தர் பாண்டிநாட்டில் சமணரொடு வாது புரிந்து வெற்றியெய்திய செயல், தமிழ் நாட்டுச் சைவசமய உலகில் ஒரு புதிய கிளர்ச்சியையுண்டுபண்ணிற்று. அவர் சென்ற இடந்தோறும், அச்சிறப்பு, மக்கள் உள்




.


  1. 1. S. I. I. Vol. VIII. No. 166; 94 of 1918; 310of 1923 ; 180
  2. 2. S. I. I. Vol. VI. No. 48.
  3. 3. Ibid. Vol. VII. No. 1025.
  4. 4. S. T. T. Voi. VIII. No. 403
  5. 5. S. I. I. Vol. V. No. 988.
  6. 7. 199 of 1932-3.
  7. 9. 358 of 1922. VII. No. 785
  8. 11. 534 of 1938.
  9. 12. VIII. No. 206.
  10. 13. 54 of 1932-3
  11. 16. 214 of 1910. *