உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உவமைக்கவிஞர் சுரதா


உதவி சபைத் தலைவர் : ஸ்ரீமான் ஜெ.எம். நல்லசாமிப் பிள்ளையவர்கள், B.A.; B.C.; High Court Vakil, மதுரை
ஸ்ரீமான் T. நல்லசிவன் பிள்யைவர்கள், B.A., B.L., High Court Vakil சென்னை
காரியதரிசி : ஸ்ரீமான் கே. சுப்பிரமணியப் பிள்ளை. அவர்கள் எம்.ஏ., எம்.எல், பொக்கிதார் : ஸ்ரீமான் W.T. கோவிந்தராஜ முதலியார் அவர்கள், சென்னை
பத்திராசிரியர் : சித்தாந்த சரபம் -அஷ்டாவதானம் சிவஸ்ரீ - கலியானசுந்தர யதீந்திரவர்கள் சென்னை (மணவழகு)
இதழ் : சித்தாந்தம் (1918) தொகுதி -7 பகுதி - 1 பக்கம் - 21, 22
கலியாண சுந்தரம் - மணவழகு (1918)

ம-ள-ள -ஸ்ரீ ஸ்ரீபெரும் பூதூர் குமார வேலாயுத முதலியார் என்பவர் சிவானந்தச் செல்வராகிய தாயுமான சுவாமிகள் பாடலுக்கு ஒரு தக்கவுரை எழுதி யுபகரிக்கின் சஞ்சிகை ரூபமாக வெளிப்படுத்திக் கொள்வே னென, அவர் வேண்டுகோளுக் கியைந்து சைவாசார துல்யரான தாயுமான சுவாமிகள் திருவடித் தியானத்தால் திருவருளை முன்னிட்டு ஆசிரியர் இருதயத்துண்மை சூழ்ந்து, பர பிரம சூத்திரமாகிய சித்தாந்த மகா சூத்திரம் என்று அறிஞரானுய்த் தோதப் பெறுஉம் வடமொழிச் சிவஞான போத மொழி பெயர்ப்பாகிய தென்மொழிச் சிவஞான போதமாதி மெய்கண்ட சாஸ்திரங்கட்கும் திராவிட திராவிட மகா பாஷ்யாதிகட்கும் இணங்கப் பலவரிய பெரிய சுத்தாத்துவித சித்தாந்த சாஸ்திரப் பிராமாணங்கள் எண்ணில காட்டி, மெய்கண்ட விருத்தியுரை என வொன்றியற்றினான்.

ஆன்மாவிற்கு இயற்கையாக வமைந்துள்ள திரோதானத்தால் ஏதாகிலும் மாறுபாடு விளைந்திருக்குமேல் முன்பின்னராய்ச்சியால் முறைப்படுத்தி வாசித்துக் கொள்ளும்படி சன்மார்க்கர்களை வந்தனத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றனன்.

சென்னைப் பட்டணம் 1918

- மணவழகு

கீலக ௵ கன்னி ரவி

நூல் : தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு முதலிய மூலமும் சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை - கலியாண சுந்தர முதலியார் மெய்கண்ட விருத்தியுரையும். பக்கம்-2