உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போளுர்கள். காட்டைச் சுற்றி வளைத்து நின்றுகொண்டார் கள். மரங்கள் புதர்கள் மறைவிலிருந்த மான் கூட்டத்தைக் கலைத்தார்கள். அவை வெளியே வந்ததும், பறை அடித்தும் கூச்சலிட்டும் குழம்பி ஓடச்செய்தார்கள். எல்லாப் பக்கங்களி லும் மக்கள் துரத்தவே, மான்கள் வேறு வழி இன்றி, ஒடி ஒடி அரண்மனைப் பூங்காவில் நுழைந்தன. எல்லா மான்களும் வேலிக்குள் வந்து சேர்ந்ததும், நகர மக்கள் வேலிக் கதவை அடைத்து விட்டார்கள். பிறகு அரசனிடம் போய், இனி, தங்கள் விருப்பம்போல் நாள் முழுவதும்கூட வேட்டையாட லாம்” என்று கூறினர்கள். பிடித்துவந்த மான்களில் இரண்டு கூட்டங்கள் இருந்தன. ஒரு கூட்டத்திற்குத் தலைவன் ரோகந்தா. மற்ருெரு கூட்டத் திற்குத் தலைவன் ஹீரான். அதுவும் ஒரு சிறந்த மான்தான். ஆலுைம் ரோகந்தாவைப் போல் அது தன் இனத்தை அன்பினுல் அடக்கி ஆளவில்லை; அதிகாரத்தால் அடக்கி ஆண்டது. அரசன், இந்த இரு தலைவர்களையும் கவனித்தான். தான் அறிந்த கலைமான்களிலேயே இவை மிகச் சிறந்தவை என்பதை உணர்ந்தான். இந்த இரு தலைவர்களுக்கும் யாரும் என்விதத் தீங்கும் இழைக்கக் கூடாது? என்று கட்டளை யிட்டான். புதிய அரசன் தினமும் வேட்டையாடினன். தான் ஒரு சிறந்த வில் வீரன் என்று பெருமைப்பட்டான். மான்கள் நெடுந்துாரம் ஒடுவதற்கு வாய்ப்புக் கொடுத்த பிறகுதான்