உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டுக் குள்ளே சென்றவன்
மிகவும் பெரிய உலக்கையைக்
காட்டிக் கொண்டே திரும்பினன்;
கையை ஓங்க லாயினன்.

‘பல்லும் நகமும் போனபின்
பயமு றுத்த முடியுமோ?
நல்ல பிள்ளை போல நீ
நடையைக் கட்டு; சீக்கிரம்!

கண்டாய் எனது கையிலே
கனத்த உலக்கை இருப்பதை ;
மண்டை பிளந்து போய்விடும்.
வழியைப் பார்த்து ஓடிடு!’

என்ற விறகு வெட்டியை
ஏது சிங்கம் செய்திடும்?
ஒன்றும் கூறி டாமலே
ஓட்டம் பிடிக்க லானது!

பெண்ணைக் கேட்க வந்தவர்
பேச்சு மூச்சு இன்றியே
கண்ணை மூடி ஓடிடும்
காட்சி நல்ல காட்சிதான்!


65