சித்தாந்தச் சாத்திரங்கள்

விக்கிமூலம் இலிருந்து

சித்தாந்தச் சாத்திரங்கள் பதினான்கு[தொகு]

சித்தாந்தச் சாத்திரங்கள் எனக்குறிப்பிடப்படுவன சைவ சித்தாந்த நூல்கள் ஆகும். அவை பதினான்கு. அவை மெய்கண்ட நூல்கள் எனவும் வழங்கப்படும். மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் எனும் நூலில் கூறப்படு்ம் சைவசித்தாந்தக் கருத்துகளின் அடிப்படையில் எழுந்தநூல்களே சித்தாந்தச் சாத்திரங்கள் அல்லது மெய்கண்ட சாத்திரங்கள் ஆகும். அந்நூல்களைத் தொகுத்து ஒரு பழையவெண்பா பின்வருமாறு உரைக்கும்.

உந்தி களிறே உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்- வந்தவருள்
பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவடு
உண்மைநெறி சங்கற்பம் உற்று.
இப்பாடல் குறிக்கும் நூல்களாவன
உந்தி- திருவுந்தியார் (1); களிறு- திருக்களிற்றுப்படியார்(2); உயர்போதம்- சிவஞானபோதம்(3); சித்தியார்- சிவஞான சித்தியார்(4);
இருபா- இருபா இருபஃது(5); உண்மை- உண்மை விளக்கம்(6); பிரகாசம்- சிவப்பிரகாசம்(7); அருள்- திருவருட்பயன் (8); வினா- வினா வெண்பா (9);
போற்றி- போற்றிப் பஃறொடை(10); கொடி- கொடிக்கவி(11); நெஞ்சு- நெஞ்சுவிடு தூது(12); உண்மைநெறி- உண்மைநெறி விளக்கம்(13);
சங்கற்பம்- சங்கற்ப நிராகரணம்(14).


சிவஞானபோதம்
உண்மைநெறிவிளக்கம்
திருவருட்பயன்
வினாவெண்பா
இருபாஇருபது
உண்மைவிளக்கம்
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]