உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் உரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரிமைகளுக்கு அரண் செய்து நிற்கும் நூலே. கடவுளையும் அரசனையும் முன்னிலைப்படுத்தி, அவர்களுக் காகவே தோன்றும் இலக்கியங்கள் மக்களை மறந்து விடுவனவாக அமைந்து விட்டன. திருக்குறள் மனிதனை முன்னிலைப்படுத்துகிறது. ஆதலால், திருக்குறள் புதுமை நிறைந்தது; பொதுமை தழுவியது. திருக்குறள் மனித சமுதாயத்தைச் சீருற வளர்த்து அவ்வழி அந்தச் சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குடும்பத்தைச் செழுமைப்படுத்தி அதன் பயனாகத் தனிமனிதனைச் செழுமையாக வளர்த்து மீண்டும் சமுதாயம் பயனுறும் வகையில் சமுதாயத்தை இயக்கும் நூல். மனித குலத்தை வேறுபடுத்திப் பகை வளர்க்கும் எந்த ஒரு கொள்கையையும், கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாதது. திருக்குறளுக்குரிய ஒரே பெருமை, நாடு, மொழி, இனம், சமயம் ஆகிய வேறுபாடுகளைத் திருக்குறள் தழுவவில்லை. மாறாக, முற்றாக ஒதுக்கியிருக்கிறது. நாட்டுப்பற்றும்கூட எல்லை கடக்கும்பொழுது பகையை வளர்க்கிறது. எண் நாடு சிறந்தது எனப் போரிடத் தொடங்குகின்றனர். திருக்குறள் நாட்டின் இலக்கணம் பேசுகிறது. ஆனால், அது தமிழ்நாட்டைப் பற்றிப் பேசவில்லை. திருக்குறள் உலகம் தழிஇய ஒட்பம் உடையது. . திருக்குறள், வாழ்க்கையில் பிறந்த வாழ்வியல் நூல்; திருக்குறள் வாழ்க்கையோடிசைந்த அறநூல். திருக்குறள் சமய நூல். ஆனால் உலகப் பொதுச் சமயநூல்; சமயங்களைக் கடந்த பொதுநெறி நூல். திருக்குறள் மானுடத்தின் வெற்றியைக் குறிக்கோளாக உடையது. திருவள்ளுவத்தின் வழி வையகம் இயங்கும்போது இன்பம் மலரும்; துன்பம் நீங்கும் ! ֆֆֆֆֆֆ