உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கடோடி இலக்கியம்

கொள்பவர்கள் யார் தெரியுமா? நிலமகளை வழிபட்டு: உழுது பயிரிட்டு உழைக்கும் குடியானவர்களே முதல் முதலாகப் பஞ்சத்தை உணர்கிரு.ர்கள். மழை பொய்த்துவிட்டதென்ரு ல் அவர்களுடைய வயிற்றில் தான் முதலில் பகீரென்கிறது; மழை மறந்த வானத்தைக் கண்டு நடு நடுங்கிக் கண்ணிர் விடுபவர்கள் நிலமகளின் திருத்தொண்டர்களே.

மாதம் மும்மாரி பெய்யுமென்பது பழைய காலத்து நம்பிக்கை. நடோடிகளின் நீதியிலே மாதம் மும்மாரி பெய்வதுதான் அறம் குன்ருத நாட்டுக்கு அடையாளம், அது குறைந்தால் தர்ம தேவதை நாலு காலாலும் நிற்க வில்லை என்றுதான் எண்ணு வார்கள். மழை பெய்யா விட்டால், மழையை வேண்டிச் சாமிக்குப் பூசை போடுவார்கள்; வருண பகவானை வேண்டுவார்கள்; பட்டினி கிடப்பார்கள்; கொடும்பாவி கட்டிச் சுமப் 1.1st of 5 gir. .. •.

டி ைழ பெய்யாத துன்பத்தை அவர்கள் வருணிக் கும் முறையே தனிவிதம்ாக இருக்கும்:

மழையுங் கிடையாது மன்னனது சீமையிலே தூறல் கிடையாது சோழனது சீமையிலே பயிரும் விளையாது பறவைகள் காடாது குடிக்கஜலம் கிடையாது குருவிகள் நாடாது தீய்ந்தன் பயிர்களெல்லாம் தேசங்கள் அத்தனையும் காய்ந்தன மரங்களெல்லாம் கனியும் கிடையாது. ஏரி குளங்களிலே இறைக்கஜலம் கிட்டாது பூமி தனிற்புல்லு பூண்டுங் கிடையாது சருகுபோல் உலர்ந்தனரேதனிச்சோழன் பட்டணத்தில் அன்னங் கிடையாது அரிய மனிதருக்கு