உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டப்டப் சத்தம் பக்கத்து
ராமு வீட்டில் கேட்கவே
அப்பா அருகில் வந்தனன்.
“அடுத்த வீட்டில் பாரப்பா !

வேட்டு வாங்கி ராமுவும்
விடுகி றானே! சத்தமும்
கேட்கு தப்பா. எனக்குநீ
கிடையா தென்று கூறினாய்”

என்று கூறித் தந்தையை
இழுத்து வந்தான். இருவரும்
சென்று ராமு வீட்டினில்
கண்ட தென்ன, தெரியுமா ?

வெடிக்கும் சீன வெடியைப்போல்
வீம்பு செய்த ராமுவை
அடித்துக் கொண்டு தந்தையார்
அங்கி ருந்தார்; வெடியில்லை!

60