உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்று கூற அதனைக் கேட்டே
இன்பம் கொண்ட வேணுவும்,
அன்றே குதிரைப் பந்த யத்தில்
ஆவ லாகக் கலந்தனர்.

குதிரைப் பந்த யத்தில் அவரும்
கொஞ்சங் கொஞ்சமாகவே,
அதிகப் பணத்தை இழந்து மிகவும்
அல்லற் பட்டுத் திரும்பினர்.

திரும்பி அவரும் வந்த போது
திடுதிப்பென்று வேகமாய்,
அருகில் வந்த குதிரை வண்டி
அவரின் மீது மோதவே,

வலது கையும் முறிந்த தையோ!
வைத்தி யர்கள் பார்த்துமே,
பலனே இல்லை; ஆத லாலே,
பாவம், நொண்டி யாயினார்!

‘கஷ்டம் மிகவும் பட்டேன், இந்தக்
கையொ டிந்த தால்’ என
நஷ்ட ஈடு கோரி ரூபாய்
நான்கு நூறு பெற்றனர்.


110